NATIONAL

அரசாங்க மருத்துவமனைகள், கிளினிக்குகளில் பல் மருத்துவர்கள் அதிகரிப்பு- அமைச்சர் தகவல்

9 பிப்ரவரி 2023, 9:08 AM
அரசாங்க மருத்துவமனைகள், கிளினிக்குகளில் பல் மருத்துவர்கள் அதிகரிப்பு- அமைச்சர் தகவல்

கோல சிலாங்கூர், பிப் 9- அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பைச் சமாளிப்பதற்காகப் பல் மருத்துவர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சு அதிகரிக்கவுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் பொதுச் சேவைத்துறை மற்றும் நிதியமைச்சுடன் தமது தரப்பு விவாதித்து வருவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.

பல் மருத்துவர்களின் பற்றாக்குறை மற்றும் மருத்துவ வசதி குறைபாடு குறித்து நாங்கள் அறிந்துள்ளோம். பணிக்கு அமர்த்தப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கை கடந்த ஈராண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் பல் மருத்துவர்களின் எண்ணிக்கை 447 ஆக உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த

எண்ணிக்கை 154ஆக மட்டுமே இருந்தது என்றார் அவர்.

பல் மருத்துவர்களைப் பணியமர்த்தும் நடவடிக்கை தொடரும் என்பதோடு இவ்வாண்டிலும் மேலும் அதிகமான மருத்துவர்கள் சேர்க்கப்படுவர் என்றார் அவர்.

இன்று இங்குள்ள தஞ்சோங் காராங் மருத்துவமனையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.