NATIONAL

வேன் விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்தனர்

9 பிப்ரவரி 2023, 3:57 AM
வேன் விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்தனர்

கோலாலம்பூர், பிப் 9: நேற்று பிற்பகல், பகாங் அருகே உள்ள ஜாலான் கெந்திங் ஹைலண்ட் கிலோமீட்டர் 4.8 இல் வேன் விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

பகாங் காவல் துறைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ராம்லி முகமது யூசுப் கூறுகையில், விபத்தில் இறந்தவர்கள் வோங் சௌன் சியெட் (ஓட்டுனர்), 49; வோங் ஹா லன் (67), லீ மோய் (67); கோ சியூ கிம் (61), ஆங் மெங் ஹிங் (62), சியாவ் மீ தின் (72) மற்றும் சாங் தெம் கோங் (70).

கெந்திங் மலையிலிருந்து 13 பயணிகள் பினாங்குக்குத் திரும்பிக் கொண்டிருந்த சமயம், அவர்கள் பயணித்த வேன் வேக கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் உள்ள கான்கிரீட் சாலை மீது மோதியதாக காவல்துறை விசாரணையில் கண்டறியப்பட்டது.

"விபத்தில் வேனின் ஓட்டுநர் ஐந்து பயணிகளுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிறப் பயணிகள் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமயத்தில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்" என்று ஒரு அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.