NATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் 184 பேர் பாதிப்பு- இரு மரணங்கள் பதிவு

8 பிப்ரவரி 2023, 4:18 AM
கோவிட்-19 நோய்த் தொற்றினால் 184 பேர் பாதிப்பு- இரு மரணங்கள் பதிவு

ஷா ஆலம், பிப் 8- நாட்டில் நேற்று 184 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் மூன்று வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன.

கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய இரு மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாகச் சுகாதார அமைச்சின் கே.கே.எம்.நாவ் அகப்பக்கம் கூறியது. இதனுடன் சேர்த்து இந்நோயினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,946 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி நாட்டில் 9,982 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிரத் தாக்கத்தை எதிர் கொண்டுள்ளனர். அவர்களில் 9,621 பேர் அல்லது 96.4 விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 357 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் நால்வர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நோய்த் தொற்றிலிருந்து நேற்று 253 பேர் குணமடைந்த வேளையில் இவர்களுடன் சேர்த்து இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்து 91 ஆயிரத்து 426ஆக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.