NATIONAL

அந்நிய நாட்டினரை வேலைக்கமர்த்தியக் கடைகள் மீது காவல் துறை, எம்.பி.ஏ.ஜே. சோதனை- அறுவர் கைது

8 பிப்ரவரி 2023, 2:49 AM
அந்நிய நாட்டினரை வேலைக்கமர்த்தியக் கடைகள் மீது காவல் துறை, எம்.பி.ஏ.ஜே. சோதனை- அறுவர் கைது

ஷா ஆலம், பிப் 8- வணிக மையங்கள் மீது காவல் துறை மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் நேற்று மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஆறு அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

சொந்தமாக வர்த்தகத்தில் ஈடுபடும் மற்றும் வர்த்தக மையங்களில் வேலை செய்யும் அந்நிய நாட்டினரை இலக்காக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது.

லைசென்ஸ் விதிகளை மீறி செயல்படும் வர்த்தக ஸ்தாபனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் கூறியது.

இச்சோதனையின் போது 2007ஆம் ஆண்டு (எம்.பி.ஏ.ஜே.) வர்த்தக மற்றும் தொழில்துறை லைசென்ஸ் துணைச் சட்டத்தின் 4(4)(சி) பிரிவின் கீழ் நான்கு வணிக மையங்களுக்குச் சீல் வைக்கப்பட்டதாக அது தெரிவித்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.