புத்ராஜெயா, பிப். 7 - மக்கள் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அம்சத்திலும் தங்களின்செயல் திறனை மேம்படுத்துமாறு அனைத்து அமைச்சுகள் மற்றும் அரசு துறைகளைப் பிரதமர் டத்தோ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
இன்று நடைபெற்ற பிப்ரவரி மாதத்திற்கான பிரதமர் துறை ஊழியர்களுடனான மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய அன்வார், நாட்டின் நிர்வாகத்தின்
கண்ணியத்தை உயர்ந்த குறிப்பாகப் பாராட்டத்தக்க நிலைக்கு உயர்த்துவதே
தற்போதைய சவால் என்று கூறினார்.
தலைவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை நேர்மையாக நிறைவேற்றினால் அனைத்து வகையான அடக்குமுறைகளில் இருந்தும் மக்களை விடுவிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
தலைவர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் விசுவாசம் மக்களை அனைத்து வகையான
அடக்குமுறைகளிலிருந்தும் விடுவிக்கும். தங்கள் அடிப்படை உரிமைகள்
புறக்கணிக்கப்படும் அளவுக்கு மக்கள் ஏமாற்றபட்டுள்ளனர் என்றார்.
அமலாக்கத்துறையில் இன்னும் அலட்சியம் இருப்பதாகக் கூறிய அவர் அதை
உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றார்.
எந்தவொரு உரிமத்தையும் (லைசென்ஸ்) பெறுவதற்கு நீங்கள் மணிக்கணக்கில்
வரிசையில் நிற்க வேண்டும் என்கிற நிலைமை நீடிக்கிறது என்றால் என்னைப் பொறுத்தவரை அதை சரிசெய்ய வேண்டும் என்று அன்வார் மேலும் சொன்னார்.
NATIONAL
அமைச்சுகள், அரசு துறைகள் செயல் திறனை மேம்படுத்த வேண்டும்- பிரதமர் வலியுறுத்து
7 பிப்ரவரி 2023, 4:58 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பெரோடுவா கார்களுக்கான பராமரிப்புச் சேவைக் கட்டணம் 10 விழுக்காடு குறைகிறது
Latchumy Ramamoorthy
18 ஜூன் 2026

national
எங்களுக்கு நல்ல ஒற்றையர் வீரர்கள் இல்லை என்பது உண்மையல்ல-பிஏஎம்
Pakiya
7 மே 2026

national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

வகைnational
உங்கள் கருத்து என்ன?



