ALAM SEKITAR & CUACA

சபா, ஜோகூர் மாநிலங்களில் 552 பேர் வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம்

6 பிப்ரவரி 2023, 3:16 AM
சபா, ஜோகூர் மாநிலங்களில் 552 பேர் வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம்

கோலாலம்பூர், பிப் 6- சபா மற்றும் ஜோகூர் மாநிலங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்றிரவு 8.00 மணி நிலவரப்படி இவ்விரு மாநிலங்களிலும 552 பேர் மட்டுமே துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தனர்.

ஜோகூர் மாநிலத்தின் பத்து பஹாட்டில் உள்ள ஒரு துயர் துடைப்பு மையம் நேற்று மாலை 4.00 மணிக்கு மூடப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணக்கை 506ஆக குறைந்துள்ளதாக மாநில வெள்ள பேரிடர் மேலாண்மை செயல்குழு கூறியது.

தற்போது பத்து பஹாட்டில் உள்ள நான்கு துயர் துடைப்பு மையங்களில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 480 பேரும் சிகாமாட்டில் உள்ள துயர் துடைப்பு மையத்தில் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 26 பேரும் தங்கியுள்ளதாக அது தெரிவித்தது.

இதனிடையே, நேற்றிரவு நிலவரப்படி சபா மாநிலத்தின் பியூபோர்ட்டில் உள்ள ஒரு நிவாரண மையத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை இந்த எண்ணிக்கை 40 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேராக இருந்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.