NATIONAL

பினாங்கில் வெள்ள நிலை சீரடைந்தது; ஜொகூர், சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

5 பிப்ரவரி 2023, 3:48 AM
பினாங்கில் வெள்ள நிலை சீரடைந்தது; ஜொகூர், சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

கோலாலம்பூர், பிப் 5: பினாங்கில் வெள்ள நிலை சீரடைந்தது தொடர்ந்து அங்குள்ள இரண்டு தற்காலிகத் தங்கும் மையங்கள் (பிபிஎஸ்) முழுமையாக மூடப்பட்டது. மேலும், ஜொகூர் மற்றும் சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பினாங்கில், சுற்றுச்சூழல் மற்றும் நலக் குழுவின் தலைவர் பீ பூன் போ, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று மதியம் தத்தம் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர் என்றார்.

"வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவர்களின் வீடுகள் மீண்டும் வாழ்வதற்குப் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்த நாங்கள் அவர்களின் அனைத்து வீடுகளையும் ஆய்வு செய்தோம். இன்றைய நல்ல வானிலையும் நீர் வடிந்தோடுவதை துரிதப்படுத்தியது மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளவும் முடிந்தது," என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

ஜொகூரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 769 ஆக குறைந்துள்ளது மாநிலப் பேரிடர் மேலாண்மை குழு (JPBN), திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 210 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 743 பேர் பத்து பஹாட் மாவட்டத்தில் உள்ள ஐந்து தற்காலிகத் தங்கும் மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் என்று தெரிவித்தது.

அறிக்கையின்படி, ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் இன்னும் செகாமட்டில் உள்ள ஒரு பிபிஎஸ்ஸில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சபாவில் இயங்கி வரும் ஒரே தற்காலிகத் தங்கும் மையத்தில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேர் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.