NATIONAL

விபத்தில் லாரி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்தார்

2 பிப்ரவரி 2023, 6:45 AM
விபத்தில் லாரி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்தார்

ஈப்போ, பிப் 2 - இன்று அதிகாலை வடக்கு-தெற்கு விரைவுச் சாலையின் (தெற்கு நோக்கி) கிலோமீட்டர் 352.2 இல் இரண்டு லாரிகள் மற்றும் டிரெய்லரால் ஏற்பட்ட விபத்தில் லாரி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்தார்.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அதிகாலை 5.13 மணிக்கு அலுவலகத்திற்கு அழைப்பு வந்ததை அடுத்து, பிடோர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்தது.

29 வயதுடைய லாரி ஒட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது. மற்றொரு லாரி மற்றும் டிரெய்லரின்  ஓட்டுனர்கள் எந்த காயமும் இன்றி தப்பியதாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காலை 6.45 மணிக்கு நடவடிக்கை முடிவடைந்ததாகவும், லாரி ஓட்டுனரின் சடலம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டதாகவும் அவர் கூறினார்.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.