கிள்ளான், பிப் 1- கிள்ளான் நகராண்மைக் கழகம் இவ்வாண்டு நவம்பர் மாதம்23 ஆம் தேதி மாநகர் அந்தஸ்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அந்த கனவு மாநகர இலக்கை அடையும் வகையில் சமூகத்திற்கான அடிப்படை சேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் தாங்கள் கவனம் செலுத்தி வருவதாக நகராண்மைக் கழகத் தலைவர் நோரைனி ரோஸ்லான் கூறினார்.
இந்த ஆண்டில் நகராண்மைக் கழகம் வேலை கலாசாரத்தை வலுப்படுத்துவதுடன் திடக்கழிவு சேகரிப்பு, பொதுத் தூய்மை, உள்கட்டமைப்பு பராமரிப்பு, நிலவடிவமைப்பை அழகுபடுத்துதல் மற்றும் சட்ட அமலாக்கம் போன்ற அடிப்படை சேவைகளை மேம்படுத்தும்.
"அடையாளம், ஒற்றுமை மற்றும் 'நாகரிக சமுதாயம்' என்ற அணுகுமுறையின் அடிப்படையில் சமூகத்தை மேம்படுத்துவது உட்பட ஆக்கத்திறன் அளிக்க வேண்டிய அம்சங்களை வலியுறுத்தி மக்கள் வாழத் தகுதியான நகரமாக கிள்ளானை உருவாக்க விரும்புகிறோம் என்று அவர் சொன்னார்.
கிள்ளான் நகராண்மைக்கழகத்தின் 2023ஆம் ஆண்டிற்கான முதலாவது கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், கிள்ளான் மாநகரமாக மாறுவதற்கான இலக்கை அடையும் வகையில் தற்போதுள்ள தரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக அனைத்து நகராண்மைக் கழக ஊழியர்களும் தங்களின் பணி முறையை மாற்ற வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.
மக்களின் செழிப்பு மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்காக உற்பத்தித் திறனும் போட்டித் திறனும் கொண்ட நகரமாக இதனை உருவாக முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ECONOMY
கிள்ளான் நகராண்மைக்கழகம் நவம்பர் 23ஆம் தேதி மாநகர் அந்தஸ்தைப் பெறும்
1 பிப்ரவரி 2023, 6:07 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
புவிசார் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதார முன்னுரிமைகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் - பிரதமர்
Shalini Rajamogun
27 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




