NATIONAL

மாட்சிமை மிக்க சிலாங்கூர் சுல்தான் மற்றும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி ஆகியோர் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பிற்கு வருகை

30 ஜனவரி 2023, 2:01 PM
மாட்சிமை மிக்க சிலாங்கூர் சுல்தான் மற்றும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி ஆகியோர் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பிற்கு வருகை

மாட்சிமை மிக்க சிலாங்கூர் சுல்தான் மற்றும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி ஆகியோர் நேற்று இரவு மாநில அளவிலான சீனப் புத்தாண்டு 2023 திறந்த இல்ல உபசரிப்பிற்கு வருகை புரிந்துள்ளனர்.

சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் அவர்களின் வருகையை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வரவேற்றார்.

மேலும் பங்கு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை எஸ்கோ டத்தோ தெங் சாங் கிம், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் சுல்தான் அவர்கள் பறை அடித்து, தெங்கு பெர்மைசூரியுடன் 'யீ செங் பாடல் பாடி' அந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

சிங்க நடனம், நாக நடனம், சைனீஸ் ஓபரா மற்றும் டிரம்மிங் ஆகிய நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தார்.

இன்வெஸ்ட் சிலாங்கூர் இம்முறை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு இரண்டு தனித்தனி இடங்களில் நடைபெற்றது. அதாவது ஷா ஆலம் நகர சபை விருந்து மண்டபத்திலும் பொதுமக்களுக்காக டத்தாரன் மெர்டேகாவிலும் நடைபெற்றது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.