ALAM SEKITAR & CUACA

பல் மற்றும் மருந்தக ஒப்பந்த அதிகாரிகள் நிரந்தரப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

27 ஜனவரி 2023, 11:04 AM
பல் மற்றும் மருந்தக ஒப்பந்த அதிகாரிகள் நிரந்தரப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கோலாலம்பூர், ஜன 27- கடந்த 2016 மற்றும் 2017 இல் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் பெற்ற பல் மற்றும் மருந்தக அதிகாரிகள் நிரந்தரப் பணிக்கு பொதுச் சேவைத் துறை ஆணையத்தின் தொழிலாளர் பதிவு முறையின் கீழ் (எஸ்பிஏ 9) இம்மாதம் 30ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கடந்த 2018 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட பல் மற்றும் மருந்தக அதிகாரிகளை பணி நிரந்தரம் செய்வதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 6 முதல் 21 வரை வரவேற்கப் பட்டதைத் தொடர்ந்து அடுத்தக் கட்ட நடவடிக்கையாக 2016 மற்றும் 2017 ஒப்பந்த அதிகாரிகளுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சு கூறியது.

கடந்த 2026 மற்றும் 2017இல் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் பெற்ற 242 பல் அதிகாரிகளும் 321 மருந்தக அதிகாரிகளும் இந்த நிரந்தரப் பணிக்கு விண்ணப்பம் செய்யத் தகுதி பெற்றவர்களாவர் என அது  தெரிவித்தது.

இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு பொதுச் சேவை ஆணையத்தின் அகப்பக்கத்தை வலம் வரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நிரந்தரப் பணியை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கும்படி 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு ஒப்பந்த அதிகாரிகளை சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.