NATIONAL

நாட்டில் நேற்று 132 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று- ஒருவர் மரணம்

26 ஜனவரி 2023, 9:09 AM
நாட்டில் நேற்று 132 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று- ஒருவர் மரணம்

ஷா ஆலம், ஜன 26- நாட்டில் நேற்று 132 கோவிட்-19 சம்பவங்கள்

பதிவாகின. அவற்றில் இரண்டு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன.

கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய ஒரு மரணச் சம்பவம் நேற்று பதிவு செய்யப்பட்டதாகச் சுகாதார அமைச்சின் கே.கே.எம்.நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்றைய மரணச் சம்பவத்துடன் சேர்த்து கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36,933 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, நேற்றைய நிலவரப்படி மொத்தம் 9,783 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிரத் தாக்கத்தைக் கொண்டிருந்தனர். அவர்களில் 9,402 பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்ட வேளையில் 370 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 11 நோயாளிகள் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 10 பேருக்குச் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து நேற்று 346 பேர் குணமடைந்தனர். இவர்களுடன் சேர்த்து இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்து 88 ஆயிரத்து 489 ஆக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.