ALAM SEKITAR & CUACA

சிலாங்கூர் உட்பட பல மாநிலங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

25 ஜனவரி 2023, 6:02 AM
சிலாங்கூர் உட்பட பல மாநிலங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

ஷா ஆலம், ஜன 25: சிலாங்கூரில் இன்று பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) தெரிவித்துள்ளது.

காலையில் நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர், சரவாக், சபாவில் உள்ள சில பகுதிகளில் மற்றும் திரங்கானு முழுவதும் மழை பெய்துள்ளது என்று முகநூல் மூலம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிற்பகலில், சிலாங்கூர் உட்பட கெடா, பினாங்கு, கோலாலம்பூர் நெகிரி செம்பிலான், சபா ஆகிய மாநிலங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேலும், கிளந்தான், பகாங், ஜொகூர், புத்ராஜெயா, சரவாக் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் மழை பெய்யும்

மாலையில், சிலாங்கூர், திரங்கானு, கிளந்தான், பேராக், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, பினாங்கு, சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் சில பகுதிகள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

நேற்று, மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) ஜொகூர், பகாங், மலாக்கா, நெகிரி செம்பிலான், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் இன்று வரை பல மாவட்டங்களில் ஆபத்தான அளவில் தொடர்ந்து கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.