ECONOMY

இன்று இரவு வரை சிலாங்கூரில் பல இடங்களில் கனமழை எச்சரிக்கை

23 ஜனவரி 2023, 11:57 AM
இன்று இரவு வரை சிலாங்கூரில் பல இடங்களில் கனமழை எச்சரிக்கை

ஷா ஆலாம், ஜன 23: இன்று இரவு வரை கோலா சிலாங்கூர் உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, கெடா, பேராக், பகாங், சரவாக் மற்றும் சபாவில் உள்ள சில பகுதிகளுக்கும் இதே எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி)க்கு அதிகமாக ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும்  மேலாகப் பெய்யும்   என எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும். சமீபத்திய மற்றும் துல்லியமான  தகவல்களுக்குப் பொதுமக்கள்  http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது   myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.