NATIONAL

முன்னாள் மேரு சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரானி ஓஸ்மான் காலமானார்

23 ஜனவரி 2023, 4:31 AM
முன்னாள் மேரு சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரானி ஓஸ்மான் காலமானார்

ஷா ஆலம், ஜன 23- முன்னாள் மேரு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்

அப்துல் ரானி ஒஸ்மான் இன்று அதிகாலை காலமானார். அன்னாருக்கு

வயது 65.

சிலாங்கூர் மாநில பாஸ் கட்சி தனது பேஸ்புக் பதிவில் இத்தகவலை

தெரிவித்தது. முன்னாள் சிலாங்கூர் மாநில பாஸ் கட்சித் தலைவருமான

அவர் இன்று அதிகாலை 5.00 மணியளவில் பந்திங் மருத்துவமனையில்

காலமானதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் பக்கத்தான் ராக்யாட் ஆட்சியில் இருந்த

காலக்கட்டத்தில் 2008 முதல் 2018 வரை இரு தவணைகள் டாக்டர் அப்துல்

ரானி மேரு சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.

ஒரு மருத்துவரான அப்துல் ரானி, அரசியலில் நுழைவதற்கு முன்னர்

பெக்கான் மேருவில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்தார். அன்னாருக்கு

மனைவியும் ஐந்து பிள்ளைகளும் உள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.