கோலாலம்பூர், ஜன 23- தலைநகர், கெப்போங்கில் செங்கல்லைக் காட்டி வானமோட்டியை அச்சுறுத்தியாக நம்பப்படும் சாலை ரவுடியை போலீசார் தேடிவருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக பாதிக்கப்பட்ட
நபர் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்யும்படி கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைமையகம் முகநூல் வாயிலாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டது.
இந்த அச்சுறுத்தல் சம்பவம் கெப்போங், மெட்ரோ பிரிமா, ஜாலான் மெட்ரோ 1 சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்தவர்கள் 03-6274 2312 என்ற எண்களில் கெப்போங் போலீஸ் நிலையம் அல்லது 03-4048 2222 என்ற எண்களில் செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் நடவடிக்கை அறையை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
ஆடவர் ஒருவர் செங்கல்லை கார் ஒன்றின் கண்ணாடியில் தட்டி அச்சுறுத்தும் காணொளி நேற்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
NATIONAL
செங்கல்லைக் காட்டி வாகனமோட்டியைச் அச்சுறுத்திய சாலை ரவுடிக்குக் போலீஸ் வலை வீச்சு
23 ஜனவரி 2023, 2:57 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பெரோடுவா கார்களுக்கான பராமரிப்புச் சேவைக் கட்டணம் 10 விழுக்காடு குறைகிறது
Latchumy Ramamoorthy
18 ஜூன் 2026

national
எங்களுக்கு நல்ல ஒற்றையர் வீரர்கள் இல்லை என்பது உண்மையல்ல-பிஏஎம்
Pakiya
7 மே 2026

national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

வகைnational
உங்கள் கருத்து என்ன?



