குவாந்தான், ஜன 23- இங்குள்ள தஞ்சோங் பூனாய் படகுத் துறை அருகே நேற்று மாலை பெலாட் ஆற்றில் குதித்த பெண் ஒருவர் இன்று சடலமாககண்டுபிடிக்கப்பட்டார்.
அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் நடவடிக்கையில் இருந்து தப்பும் போது ஆற்றில் விழுந்ததாகக் கூறப்படும் 42 வயதுடைய அப்பெண் விழுந்த
இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் காலை மணி 11.36 அளவில்
கண்டுபிடிக்கப்பட்டதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமது
ஜஹாரி வான் புஸூ கூறினார்.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட ரோஹிங்கியா ஆடவர் ஒருவர் அப்பெண்ணைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் வேகமான நீரோட்டத்தின் காரணமாக அம்முயற்சி தோல்வியில் முடிந்தது என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
அந்தப் பெண்ணுக்கு போதைப் பழக்கம் இருப்பதாகவும் போதையை தணித்துக் கொள்வதற்காக அடிக்கடி அந்த இடத்திற்குச் செல்வது வழக்கம் என்றும் அவரின்
மகன் கூறியதாக முகமது ஜஹாரி தெரிவித்தார்.
அப்பெண்ணின் உடல் சவப் பரிசோதனைக்காக இங்குள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
NATIONAL
ஆற்றில் குதித்தப் பெண் நீரில் மூழ்கி மரணம்
23 ஜனவரி 2023, 2:55 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பெரோடுவா கார்களுக்கான பராமரிப்புச் சேவைக் கட்டணம் 10 விழுக்காடு குறைகிறது
Latchumy Ramamoorthy
18 ஜூன் 2026

national
எங்களுக்கு நல்ல ஒற்றையர் வீரர்கள் இல்லை என்பது உண்மையல்ல-பிஏஎம்
Pakiya
7 மே 2026

national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

வகைnational
உங்கள் கருத்து என்ன?



