NATIONAL

ஆறு வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தான்

22 ஜனவரி 2023, 5:29 AM
ஆறு வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தான்

லாபுவான், ஜன. 22: தனது குடும்பத்துடன் விடுமுறைக்கு வந்த ஆறு வயது சிறுவன் இங்குள்ள வில்லாவின் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்து கிடந்தான்.

“இந்தச் சம்பவம் குறித்து காலை 8.05 மணிக்கு எங்களுக்குத் தகவல் கிடைத்தது. பாதிக்கப்பட்ட அச்சிறுவன் பிற சிறுவர்களுடன் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தான். அவரது தாயார் வில்லாவின் முன் உள்ள குளத்தின் பக்கத்திலிருந்து கண்காணித்தார்.

"அந்த சிறுவர்களின் குழுவை வில்லாவிற்குத் திரும்பும்படி தாய் கட்டளையிட்டபோது (சுமார் 15 நிமிடங்கள் குளத்தில் இருந்த பிறகு), அவர் தனது மகன் பிற சிறுவர்களுடன் இல்லாததைக் கண்டறிந்து, பின்னர் அந்தச் சிறுவனைக் கண்டுபிடித்த சிறுவர்கள் அலறி உள்ளனர் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பாதிக்கப்பட்டவரை குளத்திலிருந்து வெளியே இழுத்து முதலுதவி (CPR) அளித்தனர். ஆனால் அச் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை என்று அஹ்மத் கூறினார்.

"முதற்கட்ட கண்காணிப்பு மற்றும் ஆய்விலிருந்து, குற்றத்திற்கான எந்த கூறுகளையும் நாங்கள் காணவில்லை. மேலும் சிறுவனின் உடல் மேல் பரிசோதனைக்காக லாபுவான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது," என்று அவர் கூறினார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.