NATIONAL

சிலாங்கூர்  மந்திரி புசார் சீனச் சமூகத்திற்குச் சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்

22 ஜனவரி 2023, 5:23 AM
சிலாங்கூர்  மந்திரி புசார் சீனச் சமூகத்திற்குச் சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்

ஷா ஆலம், ஜன 22: மந்திரி புசார்  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள் இந்த நாட்டில் வாழும் அனைத்து சீனச் சமூகத்திற்கும் சீனப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் வீடுகளுக்குச் செல்லும் வாய்ப்பை இந்த சீனப் புத்தாண்டு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இது சீனச் சமூகத்திற்கு நிச்சயமாக மகிழ்ச்சியைத் தரும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்

"ஒவ்வொரு சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் முன்னிலைப் படுத்தப்படும் கூறுகள் குடும்ப உணர்வு மற்றும் பெற்றோருக்கு கீழ்ப்படிவது ஆகும்,`` என்று அவர் தனது சீன புத்தாண்டு செய்தியில் கூறினார்.

சீன ராசியைச் சித்தரிக்கும் 12 விலங்குகளில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு தண்ணீர் முயலைக் காட்டுகிறது என்றும் அமிருடின் கூறினார்.

சீன ஜோதிடத்தின்படி ஒவ்வொரு விலங்குக்கும் மரம், நெருப்பு, நிலம், உலோகம் மற்றும் நீர் ஆகிய ஐந்து கூறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

"இந்த நீர் முயல் அமைதி, நீண்ட ஆயுள் மற்றும் செழிப்பு ஆகியவற்றை கொண்டு வரும் சின்னம்" என்று அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.