மலாக்கா, ஜன. 19- தனது தந்தையைக் கவசத் தொப்பியால் தாக்கியதாக இங்குள்ள ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை ஆடவர்ஒருவர் மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த ஜனவரி 12 ஆம் தேதி காலை 7 மணியளவில் ஜாலான் ஸ்ரீ இமாஸ் 15, தாமான் ஸ்ரீ டெலோக் இமாஸில் உள்ள ஒரு வீட்டில் தன் தந்தையான எஸ்.சந்திரன் (வயது58)
என்பவரை தாக்கி காயப்படுத்தியதாக 27 வயதான சி கவியரசன் மீது குற்றம்
சாட்டப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 324 மற்றும் அதே சட்டத்தின் கீழ் சேர்த்து வாசிக்கப்படும் 326ஏ பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார். குற்றம்
நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி தர்மாஃபிக்ரி அபு ஆடாம், மாதத்திற்கு ஒருமுறை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதோடு பாதிக்கப்பட்டவரை
அணுகவும் கூடாது என உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் மறு விசாரணையை பிப்ரவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்க
நீதிமன்றம் உத்தரவிட்டது.
NATIONAL
தந்தையைக் கவசத்தொப்பியால் தாக்கியதாக மகன் மீது குற்றச்சாட்டு
19 ஜனவரி 2023, 8:32 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பெரோடுவா கார்களுக்கான பராமரிப்புச் சேவைக் கட்டணம் 10 விழுக்காடு குறைகிறது
Latchumy Ramamoorthy
18 ஜூன் 2026

national
எங்களுக்கு நல்ல ஒற்றையர் வீரர்கள் இல்லை என்பது உண்மையல்ல-பிஏஎம்
Pakiya
7 மே 2026

national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

வகைnational
உங்கள் கருத்து என்ன?



