NATIONAL

துண்டிக்கப்பட்ட பல மனித உடல் பாகங்கள் விரைவுச் சாலை ஓரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

18 ஜனவரி 2023, 6:57 AM
துண்டிக்கப்பட்ட பல மனித உடல் பாகங்கள் விரைவுச் சாலை ஓரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

கோலாலம்பூர், ஜன 18: இங்குள்ள ரவாங் சவுத் எக்சிட் அருகே வடக்கு தெற்கு விரைவுச் சாலையின் (பிளஸ்) ஓரத்தில் நேற்று காலை மனித உடல் உறுப்புகள் அடங்கிய கருப்பு லக்கேஜ் பை (bag) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விஷயத்தை உறுதிப்படுத்திய சுங்கை பூலோ மாவட்டக் காவல்துறை தலைவர் சூப்ட் ஷஃபாடன் அபு பக்கர், காலை 11.30 மணியளவில் பொதுமக்களால் அந்த பை  கண்டுபிடிக்கப்பட்டது,`` என்றார்.

காவல்துறையின் பரிசோதனையில் லக்கேஜில் தலை மற்றும் இரு கைகள் இல்லாமல் துண்டிக்கப்பட்ட பல உடல் பாகங்கள் (தோள் முதல் இடுப்பு வரை) இருப்பதைக் கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.

"பாதிக்கப்பட்டவரின் அடையாளம் காணப்படவில்லை மற்றும் உடல் பாகங்கள் மேல் நடவடிக்கைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

கொலைக்கான தண்டனை சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் இதுவரை காவல்துறையினர் விசாரணை ஆவணங்களை திறந்துள்ளனர் என்றார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.