NATIONAL

குவாங் தமிழ்ப்பள்ளி மாணவி வசுமிதா கண்ணன் திருக்குறள் மனனப் போட்டியில்  உலகச் சாதனை

18 ஜனவரி 2023, 6:13 AM
குவாங் தமிழ்ப்பள்ளி மாணவி வசுமிதா கண்ணன் திருக்குறள் மனனப் போட்டியில்  உலகச் சாதனை
குவாங் தமிழ்ப்பள்ளி மாணவி வசுமிதா கண்ணன் திருக்குறள் மனனப் போட்டியில்  உலகச் சாதனை

கோப்பாக் , ஜன 18 : கடந்த 15/1/2023 ஆம் நாள் பத்துமலை வளாகத்தில் நடந்த  திருக்குறள் மனனப் போட்டியில் 100 திருக்குறள்களை 10 நிமிடங்களில் ஒப்புவிப்பதில்  தமிழ்ப்பள்ளியின்  நான்காம்  ஆண்டு மாணவியான வசுமிதா கண்ணன் வெறும் 8 நிமிடம் 39 வினாடிக்குள் ஒப்புவித்து  உலகச் சாதனை படைத்துள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் நம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பலர் பல சாதனைகளைப் புரிந்து கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது கோப்பா மாவட்டத்திலுள்ள குவாங் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த  வசுமிதா கண்ணனும் இடம்பெற்றுள்ளார்.

இம்மாணவியின் சாதனை பிற மாணவர்களுக்கு ஓர் உந்துதலாக அமையும் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை. நம் சமூகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் செல்வி க. வசுமிதா என  அப்பள்ளி  ஆசிரியர்கள் பெருமிதம் அடைந்தனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.