NATIONAL

சுங்கை கெராயோஙில் சிக்கிய இரு வாலிபரைச் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் காப்பாற்றினர்

17 ஜனவரி 2023, 9:51 AM
சுங்கை கெராயோஙில் சிக்கிய இரு வாலிபரைச் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் காப்பாற்றினர்

கோலாலம்பூர், ஜன 17: சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் நேற்று பிற்பகல் இங்குள்ள சுங்கை கெராயோங், தாமான் பண்டான் மேவாவில் நடந்த ஒரு சம்பவத்தில் சிக்கித் தவித்த இரு வாலிபர்களை மீட்டனர்.

அம்பாங் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதற்கு முன் மாலை 5.29 மணிக்கு பொதுமக்களிடமிருந்து அவரது அலுவலகத்துக்கு அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் டத்தோ நோரஸாம் காமிஸ் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், கெராயோங் ஆற்றில் சுமார் 15 வயதுடைய இருவர் 50 மீட்டர் தூரத்தில் 20 அடி ஆழமுள்ள ஆற்று நீரில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

சம்பந்தப்பட்ட வாலிபர்கள் ஆற்றுக்கு மீன்பிடிக்கச் சென்றதாகத் தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட அந்த இரண்டு வாலிபர்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டதாக நோரசம் கூறினார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.