NATIONAL

இரு தினங்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞர் ஆற்றில் சடலமாக மீட்பு

16 ஜனவரி 2023, 7:38 AM
இரு தினங்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞர் ஆற்றில் சடலமாக மீட்பு

குவாந்தான், ஜன 16- இங்குள்ள மஸ்ஜிட் லாமா, கம்போங் பத்து போர்

பெராவில் இரு தினங்களுக்கு முன்னர் ஆற்றில் காணாமல் போன

இளைஞர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

பத்தொன்பது வயதுடைய பைசால் அக்மால் ஃபிக்ரி முகமது பவுசி எனும்

அந்த இளைஞரின் உடல் தீயணைப்புத் துறையின் கே9 மோப்ப நாய்

மூலம் கண்டு பிடிக்கப்பட்டதாகப் பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்

துறையின் இயக்குநர் இஸ்மாயில் அப்துல் கனி கூறினார்.

அந்த இளைஞரின் உடல் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் ஒரு

கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றில் மிதக்கக் காணப்பட்டது. அச்சடலம்

மீட்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது

என்று அவர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை அந்த ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது அந்த

ஆடவர் காணாமல் போனதாக ஊடகங்கள் முன்னதாகச் செய்தி

வெளியிட்டிருந்தன.

அப்பகுதிக்கு அந்த இளைஞர் தனியாக மோட்டார் சைக்கிளில்

சென்றுள்ளார். அவரின் உடமைகளை ஆற்றின் கரையில் காணப்பட்டன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.