NATIONAL

15 வயது மகளை அடித்து கொலை மிரட்டல் விடுத்தத் தந்தை

16 ஜனவரி 2023, 4:46 AM
15 வயது மகளை அடித்து கொலை மிரட்டல் விடுத்தத் தந்தை

கோலாலம்பூர், ஜன 16: தனது 15 வயது மகளை அடித்து கொலை மிரட்டல் விடுத்த நபரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர்.

பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறை தலைமை உதவி ஆணையர் ஃபக்ருதீன் அப்துல் ஹமீட் கூறுகையில், உணவக உதவியாளராகப் பணியாற்றும் 58 வயதுடைய அந்த சந்தேக நபர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் சிலாங்கூரில் உள்ள லெம்பா சுபாங்கில் கைது செய்யப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் இடைவாரால் தனது மகளை அடித்ததாகவும் மேலும் இறைச்சி வெட்டும் கத்தியைப் பயன்படுத்தி மிரட்டியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இரவு நீண்ட நேரம் அந்த இளம்பெண் ஸ்மார்ட்போனில் விளையாடியதால் இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

சுமார் 33 சென்டிமீட்டர் அளவுள்ள இறைச்சி வெட்டும் கத்தியைக் காவல்துறையினர் பறிமுதல் செய்ததாக ஃபக்ருதீன் கூறினார்.

சிறுவர் சட்டம் 2001 யின் பிரிவு 3(1)(a) இன் கீழ் விசாரணைக்காகச் சந்தேக நபர் நேற்று முதல் இந்த செவ்வாய்கிழமை வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.