NATIONAL

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட நால்வர் காயமடைந்தனர்

14 ஜனவரி 2023, 7:41 AM
அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட நால்வர் காயமடைந்தனர்

கோலாலம்பூர், ஜன 14: டேசா அமான் பூரி, கெபோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட நால்வர் காயமடைந்தனர்.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் டத்தோ நோராசம் காமிஸ் கூறுகையில், காயமடைந்தவர்கள் இரண்டு பெண்கள், ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமி ஆவர்.

"12 மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, பொதுமக்கள் தீயை அணைத்து விட்டனர். சுமார் 30 முதல் 40 சதவீதம் சேதம் ஏற்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

முகம், கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காகச் செலாயாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக நோராசம் கூறினார்.

தீ விபத்துக்கான சரியான காரணம் மற்றும் மொத்த இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.