NATIONAL

ஃபெடரல் நெடுஞ்சாலையில் ஆறு வாகனங்கள் ஒன்றை ஒன்று மோதியதில் விபத்து

13 ஜனவரி 2023, 4:38 PM
ஃபெடரல் நெடுஞ்சாலையில் ஆறு வாகனங்கள் ஒன்றை ஒன்று மோதியதில் விபத்து

ஷா ஆலம், ஜன 14: புக்கிட் ராயா வெளியேறும் ஃபெடரல் நெடுஞ்சாலையில் இன்று காலை ஆறு வாகனங்கள் ஒன்றை ஒன்று மோதிய விபத்தில் இந்தோனேசிய நபர் ஒருவர் உயிரிழந்தார்.

சிலாங்கூர் மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) இயக்குநர் டத்தோ நோரஸாம் காமிஸ் கூறுகையில், காலை 7.47 மணிக்கு அவரது அலுவலகத்துக்கு அழைப்பு வந்ததாகவும், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தாகக் கூறினார். அங்கு ஆறு வாகனங்கள் அடுத்தடுத்து பின்னாலிருந்து மோதியதைக் கண்டதாகக் கூறினார்.

அந்த சம்பவத்தின் விளைவாக, மூன்று பேர் பாதிக்கப்பட்டனர். அதில் இருவர் பலத்த காயமடைந்தனர்.

"57 வயதான நபர் தீயணைப்புத் துறையால் அகற்றப்பட்டு பின்னால்

சுகாதார அமைச்சினால் அவர் இறந்ததை உறுதி செய்யப்பட்டது. மேல் நடவடிக்கைக்காக அவரின் சடலம் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது," என்று நோரஸாம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.