NATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 380ஆக குறைந்தது- 9 பேர் மரணம்

11 ஜனவரி 2023, 6:09 AM
கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 380ஆக குறைந்தது- 9 பேர் மரணம்

ஷா ஆலம், ஜன 11- நாடு முழுவதும் நேற்று 380 கோவிட்-19 நோய்த்

தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 11 வெளிநாடுகளிலிருந்து

வந்தவர்கள் மூலம் பரவியவையாகும்.

கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய ஒன்பது மரணச்

சம்பவங்கள் நேற்று பதிவானதாக சுகாதார அமைச்சின் கே.கே.எம்.நாவ்

அகப்பக்கம் கூறியது.

இதனுடன் சேர்ந்து நாட்டில் அந்த நோய்த் தொற்றினால்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,892ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே நாட்டில் 11,412 பேர் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தை

இன்னும் எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் 10,844 பேர் அல்லது 95

விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மொத்தம் 542 பேர் கோவிட்-19 நோய்க்காக மருத்துவமனைகளில்

அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்

சேர்க்கப்பட்டுள்ள வேளையில் 11 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி

பொருத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.