NATIONAL

சிலாங்கூரில் ஐந்து மாவட்டங்களில் இன்று மாலை கனமழை பெய்யும் என மெட் மலேசியா தெரிவித்துள்ளது

10 ஜனவரி 2023, 6:42 AM
சிலாங்கூரில் ஐந்து மாவட்டங்களில் இன்று மாலை கனமழை பெய்யும் என மெட் மலேசியா தெரிவித்துள்ளது

ஷா ஆலம்,  ஜன 10: கோலா சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் கோலா லங்காட் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 3 மணி அளவில் கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) முகநூல் மூலம் தெரிவித்துள்ளது. கோலாலம்பூரிலும் இதே வானிலைதான் இருக்கக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் (மி.மீ./மணி)க்கு அதிகமாக ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது my Cuaca பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.