பாங்கி, ஜன 9 - நாட்டின் கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில் வீடியோ உதவிநடுவர் (வி.ஏ.ஆர்.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து மலேசிய கால்பந்து சங்கம் (எஃப்.ஏ.எம்.) விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று அதன் தலைவர் டத்தோ ஹமிடின் முகமது அமின் தெரிவித்தார்.
இந்த தொழில்நுட்பத்தை அமலாக்குவது தொடர்பில் தாங்கள் மலேசிய கால்பந்து லீக்குடன் (எம்.எஃப்.எல்) கடந்த ஆண்டு இறுதியிலிருந்து திட்டமிடப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இந்த தொழில்நுட்பம் குறித்து இந்த ஆண்டு அறிவிப்பை வெளியிடுவோம். ஆனால் இது முழுமையாகப் பயன்படுத்தப்படாது. எடுத்துக்காட்டாக, எஃப்.ஏ. கிண்ணம் மற்றும்
மலேசியக் கிண்ண அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்று போன்ற சில போட்டிகளுக்கு
மட்டுமே இது பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
எனினும், அதிக செலவுகளை உள்ளடக்கியதால் லீக் போட்டிகளில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாது. இருந்த போதிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் எஃப் ஏ.எம். மற்றும் எம்.எஃப்.எல். உறுதியாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இரவு இங்கு நடைபெற்ற ஹரியான் மெட்ரோ விளையாட்டுச் சாதனையாளர்
நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் பிறகு செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
இந்த தொழில்நுட்பத்தை எஃப்.ஏ. கிண்ணம் மற்றும் மலேசிய கிண்ணங்களை உள்ளடக்கிய 2023 எஃப்.ஏ. லீக்கில் பரீட்சார்த்த முறையில் மேற்கொள்ள தாங்கள்
திட்டமிட்டுள்ளதாக எஃப்.ஏ.எம். முன்னதாக கூறியிருந்தது.
NATIONAL
கால்பந்து போட்டிகளில் வி.ஏ.ஆர். தொழில்நுட்பப் பயன்பாடு தொடர்பில் விரைவில் அறிவிப்பு
9 ஜனவரி 2023, 4:14 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பெரோடுவா கார்களுக்கான பராமரிப்புச் சேவைக் கட்டணம் 10 விழுக்காடு குறைகிறது
Latchumy Ramamoorthy
18 ஜூன் 2026

national
எங்களுக்கு நல்ல ஒற்றையர் வீரர்கள் இல்லை என்பது உண்மையல்ல-பிஏஎம்
Pakiya
7 மே 2026

national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

வகைnational
உங்கள் கருத்து என்ன?



