ஷா ஆலம், ஜன 8: புக்கிட் ஜாலில் மைதானத்தில் நேற்று இரவு நடந்த ஏ. எப்.எப்(AFF) கோப்பை 2022 யின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் மலேசியா 1-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.
ஹரிமாவ் மலாயா அணி நீண்ட நேரம் எடுத்துகொள்ளவில்லை, 11வது நிமிடத்தில் ரூபேந்திரன் தட்டிக்கொடுத்த பந்தை அவர்களின் ஸ்டிரைக்கர் பைசல் ஹலிம் கோல் ஆக்கினார்.
இந்த கோல் மைதானத்தில் உள்ள பெரிய திரையில் பார்த்த பார்வையாளர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தியது. இந்த வெற்றி கிம் பான் கோன் தலைமையிலான அணிக்கு நம்பிக்கையுடன் ஜனவரி 10 அன்று காஜா ப்ராங் (யுத்த ஆணை) அணிக்கு எதிரான மறு அரையிறுதி போட்டிக்குப் பேங்காக் செல்ல தகுதி பெற்று தந்தது.
டத்தோ மந்திரி புசார் 5,000க்கும் மேற்பட்ட ஹரிமாவ் மலாயா ஆதரவாளர்களுடன் இணைந்து பெரிய திரையில் போட்டியைக் கண்டார்.
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று இரவு கலந்துகொண்ட மூன்று அதிர்ஷ்டசாலி ஆதரவாளர்களுக்கு ஹரிமாவ் மலாயா ஜெர்சி வடிவில் அதிர்ஷ்டக் குலுக்குப் பரிசையும் வழங்கினார்.








