NATIONAL

பெட்ரோல் RON97, RON95 மற்றும் டீசல் விலைகளில் இவ்வாரம் எந்தவொரு மாற்றமும் இல்லை

5 ஜனவரி 2023, 3:54 AM
பெட்ரோல் RON97, RON95 மற்றும் டீசல் விலைகளில் இவ்வாரம் எந்தவொரு மாற்றமும் இல்லை

கோலாலம்பூர், ஜன 5: ஜனவரி 5 முதல் 11 வரை RON97, RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எந்தவொரு மாற்றமும் இருக்காது.

நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், RON97 பெட்ரோல் விலை லிட்டருக்கு RM3.35, RON95 (RM2.05) மற்றும் டீசல் (RM2.15) ஆக உள்ளது எனக் குறிப்பிட்டது.

உலகளாவிய சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு விலையை தாண்டியிருந்தாலும் அரசாங்கம் RON95 பெட்ரோலின் விலையை லிட்டருக்கு RM2.05 ஆகவும்  டீசல் ஒரு லிட்டருக்கு RM2.15 ஆகவும் பராமரிக்கிறது.

"RON97 பெட்ரோலின் விலை தற்போதைய சந்தை விலை மாற்றத்திற்கு ஏற்ப குறைக்கப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"உலகக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வு பராமரிக்கப் படுவதை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்கும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.