NATIONAL

சீனாவில் இருந்து சபாவிற்கு வரும் பயணிகள் கோவிட்-19க்கு எதிராக முழுமையான தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்

5 ஜனவரி 2023, 3:51 AM
சீனாவில் இருந்து சபாவிற்கு வரும் பயணிகள் கோவிட்-19க்கு எதிராக முழுமையான தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்

கோத்தா கினபாலு, ஜன 5 - இந்த ஞாயிற்றுக்கிழமை முதல், சீனாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் சபாவிற்குள் நுழைவதற்கு முன்பு அந்தந்த நாடுகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின் படி கோவிட்-19 க்கு எதிராக முழுமையான தடுப்பூசி போட வேண்டும்.

மாநில உள்ளாட்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சர் டத்தோஸ்ரீ மசிடி மஞ்சுன் கூறுகையில், பயணிகள் சபாவிற்குப் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் அவர்களின் நெகடிவ் கோவிட்-19 சோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

"இது மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது" என்று சபாவின் கோவிட் -19 செய்தித் தொடர்பாளர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து சபாவிற்கு வரும் அனைத்து பயணிகளும் தெர்மல் ஸ்கேனரைப் பயன்படுத்தி சோதனைக்கு உட்படுததப்படுவர் என்றும், காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் கூடுதல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் மாநில அரசு நிபந்தனை விதித்துள்ளதாக மசிடி கூறினார்.

"கோவிட்-19 அறிகுறிகளைக் கொண்ட பயணிகள் ஆர்டிகே (RTK) ஆன்திஜென் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், சபாவில் 12 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 138 நோயாளிகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதில் 10 நோயாளிகளுக்குத் தொடர் கவனிப்பு தேவை, மேலும் 23 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.