NATIONAL

பண்டான் இண்டா வெடிவிபத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் கணவன்-மனைவியைக் காவல்துறையினர் கைது செய்தனர்

4 ஜனவரி 2023, 6:27 AM
பண்டான் இண்டா வெடிவிபத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் கணவன்-மனைவியைக் காவல்துறையினர் கைது செய்தனர்

ஷா ஆலம், ஜன.4: கடந்த வாரம் பண்டான் இண்டாவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் கணவன்-மனைவியைக் காவல்துறையினர் நேற்று நள்ளிரவில் கைது செய்தனர்.

இரண்டு சந்தேக நபர்களும் கெடாவில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அம்பாங் ஜெயா மாவட்டக் காவல்துறை தலைமையகத்திற்கு (IPD) அழைத்துச் செல்லப்பட்டதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு சந்தேக நபர்களும் இப்போது குற்றவியல் சட்டத்தின் 117வது பிரிவின் கீழ் விளக்கமறியலில் வைக்க உத்தரவைப் பெறுவதற்காக அம்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழன் அன்று நடந்த சம்பவத்தில், உணவகம் ஒன்றின் முன் காரின் பொனெட்டில் இருந்த ஒரு பொட்டலத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த வெடி விபத்தில் பலியானவர் உடல் மற்றும் கைகல்களில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு, இரவு 9.45 மணியளவில் அம்பாங் மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.