ALAM SEKITAR & CUACA

சிலாங்கூர் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

28 டிசம்பர் 2022, 6:27 AM
சிலாங்கூர் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

ஷா ஆலம், டிச 28- இன்று மாலை சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே வானிலை சரவாக்கிலும் (சாரிகேய், சிபு, கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான் பெத்தோங் மற்றும் முக்கா) நீடிக்கும் என மலேசிய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. சபாவில் சண்டகான் மற்றும் தாவாவ் கூடாட் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பினாங்கில் காற்று வீசும் என்றும் பெர்லிஸ், கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களில்  வானம் தெளிவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், சரவாக் (காப்பிட், மிரி மற்றும் லிம்பாங்), சபா (மேற்கு கடற்கரை, தாவாவ், சண்டகான், கூடாட்) மற்றும் லாபுவான் கூட்டரசு பிரதேசத்தில் இன்று இரவு ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வானிலை தொடர்பானத் தகவல்களை பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.