NATIONAL

நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

27 டிசம்பர் 2022, 6:05 AM
நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

ஷா ஆலம், டிச. 27: நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் சபாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்துள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,655ஆக உள்ளது.

நாடு முழுவதும் 20 தற்காலிகத் தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) மொத்தம் 693 குடும்பங்கள் இன்னும் தங்கியுள்ளதாகத் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) தெரிவித்துள்ளது.

நேற்று கிளந்தனில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 718 ஆக குறைந்துள்ளது. மேலும், திரங்கானுவில் இன்னும் 138 பேர் இரண்டு தற்காலிகத் தங்கும் மையங்களில் உள்ளனர்.

பேராக் மற்றும் சரவாக்கில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முறையே 62 மற்றும் 57ஆக குறைந்துள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.