ALAM SEKITAR & CUACA

சிலாங்கூர் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும்

27 டிசம்பர் 2022, 4:55 AM
சிலாங்கூர் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும்

ஷா ஆலம், டிச 27- நாட்டிலுள்ள ஒன்பது மாநிலங்களின் ஓரிரு

இடங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான

சாத்தியம் உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியுள்ளது.

சிலாங்கூர், பகாங், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான்,

மலாக்கா, ஜொகூர், சபா மற்றும் சரவா ஆகியவையே அந்த ஒன்பது

மாநிலங்களாகும் என அது குறிப்பிட்டது.

சபா மற்றும் லாபுவான் கூட்டரசு பிரதேசத்தில் நாளை வரை

தொடர்ச்சியாக மழை பெய்யும் என்றும் அத்துறை எச்சரித்துள்ளது.

சபா மாநிலத்தின் உட்புறப் பகுதிகள் (சிபித்தாங், கோல பென்யு மற்றும்

பியூபோர்ட்), மேற்கு கரை, சண்டகான், (தெலுப்பிட், கினாபாத்தாங்கான்,

பெலுரான், மற்றும் சண்டகான்), பியூபோர்ட் ஆகிய பகுதிகளில் இந்நிலை

நீடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

சரவா மாநிலத்தின் கூச்சிங், சமரஹான், பெத்தோங், சரிக்கேய், சிபு

மற்றும் மூக்கா ஆகிய இடங்களிலும் சபா மாநிலத்தின் மேற்கு கரை,

தாவாவ், சண்டகான், கூடாட், லபுவான் கூட்டரசு பிரதேசம் ஆகிய

இடங்களிலும் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும்

அத்துறை தெரிவித்தது.

தீபகற்ப மலேசியாவில் கெடா மற்றும் பேராக்கில் இன்று மாலை மழை

பெய்யும் என்பதோடு பினாங்கில் காற்று வீசும். பெர்லிஸ், கிளந்தான்

மற்றும் திரங்கானுவில் மழைப் பொழிவு இருக்காது.

பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், ஆகிய

மாநிலங்களின் ஓரிரு இடங்களில் இன்றிரவு மழை பெய்யும் என

எதிர்பார்க்கப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.