NATIONAL

வெள்ளம்- கிழக்குக் கரை மாநில மக்களுக்குப் பொருளுதவி தந்து உதவுவீர்- ஹிஜ்ரா வேண்டுகோள்

26 டிசம்பர் 2022, 9:39 AM
வெள்ளம்- கிழக்குக் கரை மாநில மக்களுக்குப் பொருளுதவி தந்து உதவுவீர்- ஹிஜ்ரா வேண்டுகோள்

ஷா ஆலம், டிச 26- கிழக்குக் கரை மாநிலங்களில் வெள்ளத்தில்

பாதிக்கப்பட்டவர்களுக்காக அத்தியாவசியப் பொருள்களைத் தந்து உதவுமாறு

மாநிலத்திலுள்ள தொழில்முனைவோர் மற்றம் பொது மக்களை யாயாசான்

ஹிஜ்ரா சிலாங்கூர் கேட்டுக் கொண்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பொருள்கள், போர்வை,

மருந்துகள், குளியல் பொருள்கள் போன்றவற்றை நாளை முதல் வரும்

ஜனவரி 6ஆம் தேதி வரை ஹிஜ்ரா அலுவலகங்களில் கொடுத்து

உதவலாம் என்று அந்த அறவாரியம் கூறியது.

இந்த பொருள்களை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.00 மணி

தொடங்கி மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்கலாம். இதன் தொடர்பான

மேல் விபரங்களுக்கு 016-9121962 என்ற தொலைபேசி எண்களில் தொடர்

கொள்ளலாம் என யாயாசான் ஹிஜ்ரா தனது பேஸ்புக் பதிவில்

குறிப்பிட்டுள்ளது.

பொது மக்கள் கருணை கூர்ந்து தரும் இத்தகைய உதவிப் பொருள்கள்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை ஓரளவு குறைக்கும் என்று

அது மேலும் தெரிவித்தது.

இன்று காலை 8.00 மணி நிலவரப்படி, திரங்கானுவில் 1,438 பேரும்

கிளந்தானில் 3,908 பேரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.