NATIONAL

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்கும்

25 டிசம்பர் 2022, 2:33 AM
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்கும்

ஷா ஆலம், டிச 25: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்கும் என்று டத்தோ மந்திரி புசார் நம்புகிறார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

"கிறிஸ்துமஸைக் கொண்டாடும் கிறிஸ்தவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த கிறிஸ்துமஸ் அனைவரின் மத்தியில் ஒற்றுமையின் உணர்வை வளர்க்கட்டும்," என்று அவர் முகநூல் மூலம் கூறினார்.

கிறிஸ்துமஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

டிசம்பர் 13 அன்று எபிபிஜெ (MBPJ) சிவிக் ஹாலில் 3,000க்கும் மேற்பட்ட பல்வேறு இனத்தவர்கள் கலந்து கொண்ட சிலாங்கூர் அளவிலான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் திறந்த இல்ல உபசரிப்பிற்கு அமிருடின் தலைமை தாங்கினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.