NATIONAL

பத்தாங் காலியில் இறுதி சடலம் கண்டுபிடிக்கப்பட்டது

25 டிசம்பர் 2022, 2:29 AM
பத்தாங் காலியில் இறுதி சடலம் கண்டுபிடிக்கப்பட்டது

பத்தாங் காலி, டிச 25: பத்தாங் காலி நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிலிருந்து  நேற்று மதியம் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை (எஸ்ஏஆர்) உறுப்பினர்களால் இறுதி சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

உலு சிலாங்கூர் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுஃபியன் அப்துல்லா இந்த விஷயத்தைப் பெர்னாமாவிடம் உறுதிப்படுத்தினார்.

எவ்வாறாயினும், சடலம் கண்டெடுக்கப்பட்ட மை பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அதிகாலை 2.42 மணிக்கு நிகழ்ந்த இத் துயரச் சம்பவத்தில் 31 பேர் பலியாகி வேளையில் 61 பேர் உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தில் மொத்தம் 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.