NATIONAL

பத்தாங் காலி நிலச்சரிவு- மேலும் ஒரு சடலம் இன்று காலை மீட்பு

22 டிசம்பர் 2022, 6:51 AM
பத்தாங் காலி நிலச்சரிவு- மேலும் ஒரு சடலம் இன்று காலை மீட்பு

ஷா ஆலம், டிச 22- பத்தாங் காலி ஃபாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம்

பொழுதுபோக்கு முகாம் நிலச்சரிவு பகுதியில் மேலும் ஒரு சடலத்தை

மீட்பு படையினர் இன்று காலை கண்டு பிடித்தனர்.

அந்த சடலம் இன்று காலை 10.39 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாகச்

சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தனது பேஸ்புக்

பதிவில் கூறியது. எனினும் இது குறித்த மேல் விபரங்களை அத்துறை

வெளியிடவில்லை.

இந்த பொதுழுபோக்கு மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விடியற்காலை

2.42 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 29 சிறார்கள் உள்பட 94 பேர்

பாதிக்கப்பட்டனர். அவர்களில் 61 பேர் உயிர்தப்பிய வேளையில் 26 பேர்

இதுவரை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சியவர்களைத்

தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.