NATIONAL

பத்தாங் காலி நிலச்சரிவு- மேலும் நால்வரின் உடல்கள் மீட்பு

22 டிசம்பர் 2022, 6:48 AM
பத்தாங் காலி நிலச்சரிவு- மேலும் நால்வரின் உடல்கள் மீட்பு

ஷா ஆலம், டிச 22- பத்தாங் காலி ஃபாதர்‘ஸ் ஆர்கானி ஃபார்ம் பொழுது

போக்கு முகாம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்த

மேலும் நால்வரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டன.

இரு சிறார்கள் மற்றும் இரு பெரியவர்களை உள்ளடக்கிய அந்த நான்கு

உடல்களும் இன்று காலை 10.39 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாகச்

சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.

எஞ்சியுள்ள மேலும் மூவரை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு

வருவதாக அத்துறை தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

கடந்த வெள்ளிக்கிழமை விடியற்காலை 2.42 மணியளவில் ஏற்பட்ட

நிலச்சரிவில் அங்குள்ள முகாம்களில் தங்கியிருந்த 29 சிறார்கள் உள்பட 94

பேர் பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் 61 பேர் காப்பாற்றப்பட்ட வேளையில் இதுவரை 30 பேர்

உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய மூவரைத் தேடும் பணி

தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.