NATIONAL

கிள்ளான் வட்டாரத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் மூவர் கைது

22 டிசம்பர் 2022, 6:40 AM
கிள்ளான் வட்டாரத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் மூவர் கைது

கிள்ளான், டிச 22- தென் கிள்ளான் மாவட்ட போலீசார் மாவட்டத்தின்

பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில்

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று

ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இம்மாதம் 20ஆம் தேதி இரவு கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கி, ஜாலான்

பத்து நீலாம் 34 பகுதியில் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின்

குற்றப்புலனாய்வுத் துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கே.வி.சுரேஷ்

தலைமையிலான குழு நடத்திய சோதனையில் மோட்டார் சைக்கிள்

திருட்டில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் கைது

செய்யப்பட்டதோடு அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல்

செய்யப்பட்டது.

போர்ட் கிள்ளான் போலீஸ் நிலையத்தின் தலைவர் இன்ஸ்பெக்டர் இங்

வேய் தியாம் தலைமையிலான குழு கடந்த 20ஆம் தேதி விடியற்காலை

கோலக் கிள்ளான், ஜாலான் பெலாபோஹான் உத்தாராவில் மேற்கொண்ட

மற்றொரு நடவடிக்கையில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு

திருடப்பட்டதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல்

செய்யப்பட்டது.

அந்த மோட்டார் சைக்கிள் ரவாங்கில் களவு போனதாகப் புகார்

செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட போலீஸ் தலைமையகம் பேஸ்புக்

வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இதனிடையே, கடந்த 21ஆம் தேதி காலை கிள்ளான் ஜாலான் கெபுன்

சாலை சுற்றுவட்டத்தில் இன்ஸ்பெக்டர் அகமது அபிக் ருஸ்லி

தலைமையில் மேற்கொண்ட சோதனையில் மோட்டார் சைக்கிள்

திருட்டில் சம்பந்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது

செய்யப்பட்டதாக அந்த அறிக்கை மேலும் கூறியது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.