NATIONAL

நிலச்சரிவு இடத்தில் மேலும் ஒரு ஆடவர் உடல் மீட்பு- எஞ்சிய எழுவரைத் தேடும் பணி தீவிரம்

21 டிசம்பர் 2022, 6:16 AM
நிலச்சரிவு இடத்தில் மேலும் ஒரு ஆடவர் உடல் மீட்பு- எஞ்சிய எழுவரைத் தேடும் பணி தீவிரம்

ஷா ஆலம், டிச 21- பத்தாங் காலியிலுள்ள ஃபாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம் முகாம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்டதாக நம்பப்படும் மேலும் ஒரு ஆடவரின் சடலம் இன்று காலை 11.16 மணியளவில் மீட்கப்பட்டது.

அந்த 26வது நபரின் சடலம் தேடுதல் பணி மேற்கொள்ளப்படும் பி பிரிவில் கண்டு பிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.

இன்னும் கண்டுபிடிக்கப்படாமலிருக்கும் எஞ்சிய எழுவரைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக அத்துறை தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை விடியற்காலை 2.42 மணியளவில் ஏற்பட்ட அந்த நிலச்சரிவில் 29 சிறார்கள் உள்பட 94 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 61 உயிர்த்தப்பிய வேளையில் இதுவரை 25 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் எழுவர் தொடர்ந்து தேடப்பட்டு வருகின்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.