ஷா ஆலம், டிச 21- பத்தாங் காலி முகாம் நிலச்சரிவு சம்பவத்தில் பலியான 25வது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.நேற்று இரவு 11.20 மணியளவில் அச்சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் உறுதிப்படுத்தினார்.
இதன் தொடர்பான மேல் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ஹபிஷாம் முகமட் நூர் தெரிவித்துள்ளார் என பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, ஜாலான் கெந்திங்கில் ஃபாதர்ஸ் ஆர்கானிக் ஃபார்ம்
பண்ணைக்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்ததோடு 61 பேர் உயிர் பிழைத்துள்ளனர். மீதமுள்ள எட்டு பேரை இன்னும் காணவில்லை.
இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட 94 பேரில் 29 பேர் சிறார்கள் என்று பேரிடர்
செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தை மேற்கோள் காட்டி பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
NATIONAL
நிலச்சரிவு பகுதியிலிருந்து சிறுமியின் உடல் மீட்பு- மரண எண்ணிக்கை 25ஆக உயர்வு
21 டிசம்பர் 2022, 2:21 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பெரோடுவா கார்களுக்கான பராமரிப்புச் சேவைக் கட்டணம் 10 விழுக்காடு குறைகிறது
Latchumy Ramamoorthy
18 ஜூன் 2026

national
எங்களுக்கு நல்ல ஒற்றையர் வீரர்கள் இல்லை என்பது உண்மையல்ல-பிஏஎம்
Pakiya
7 மே 2026

national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

வகைnational
உங்கள் கருத்து என்ன?



