NATIONAL

பத்தாங் காலி நிலச்சரிவில் காணாமல் போன 9 நபர்களைத் தேடும் பணி இன்று காலை மீண்டும் தொடங்கியது

20 டிசம்பர் 2022, 7:13 AM
பத்தாங் காலி நிலச்சரிவில் காணாமல் போன 9 நபர்களைத் தேடும் பணி இன்று காலை மீண்டும் தொடங்கியது

பத்தாங் காலி, டிச. 20: பத்தாங் காலி நிலச்சரிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் ஒன்பது பேரைத் தேடும் பணி, ஐந்தாவது நாளாக இன்று காலை 8.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது.

கண்டறிதல் நாய் பிரிவின் (K9) நாய்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களின் பணியாளர்களை உள்ளடக்கிய குழு தெளிவான வானிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

நேற்று, நள்ளிரவு 12 மணியளவில், தேடல் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

முகாம் தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2.42 மணி அளவில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் இதுவரை 61 பேர் உயிர் பிழைத்துள்ளனர் மற்றும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.