ALAM SEKITAR & CUACA

ஒரு வயது ஆண் குழந்தை வெள்ளத்தில் மரணம் – கிளந்தான்

20 டிசம்பர் 2022, 6:44 AM
ஒரு வயது ஆண் குழந்தை வெள்ளத்தில் மரணம் – கிளந்தான்

பாசீர் மாஸ், டிச 20: இன்று மதியம் 1 மணியளவில் இங்குள்ள கம்போங் குவால் தோக் டே, ரந்தாவ் பஞ்சாங்கில் ஒரு வயது மற்றும் மூன்று மாத ஆண் குழந்தை நீரில் மூழ்கி இறந்து கிடந்தது.

ரந்தாவ் பஞ்சாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஷபாவி ஸ்தாபா கூறுகையில், பாதிக்கப்பட்ட அக்குழந்தை தனது சகோதரியுடன் வீட்டின் தாழ்வாரத்தில் விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்பட்டது. பின் வெள்ளத்தால் மூழ்கி இருந்த வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளது.

"நேற்று பிற்பகல் இச்சம்பவம் தொடர்பாக எங்களுக்கு அழைப்பு வந்தது, மீட்பு நடவடிக்கைக்கு பிற்பகல் 1.04 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்தோம்.

"நாங்கள் சம்பவ இடத்தை வந்தடைவதற்குள், அக்கிராம வாசிகளால் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் அக்குழந்தையின் உடல் பாசீர் மாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

- பெர்னாமா

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.