ALAM SEKITAR & CUACA

சிலாங்கூர் மாநிலத் தீயணைப்புத் துறை இயக்குநருக்கு லேசான பக்கவாதம்- மருத்துவமனையில் அனுமதி

20 டிசம்பர் 2022, 5:25 AM
சிலாங்கூர் மாநிலத் தீயணைப்புத் துறை இயக்குநருக்கு லேசான பக்கவாதம்- மருத்துவமனையில் அனுமதி

பத்தாங் காலி, டிச 20- இங்குள்ள ஃபாதர்ஸ் ஆர்கானிக் ஃபார்ம் முகாம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது முதல் ஓய்வின்றி அப்பகுதியில் மீட்புப் பணிகளைக் கவனித்து வந்த சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் டத்தோ நோராஸாம் காமிஸ் சோர்வு மற்றும் லேசான பக்கவாதம் காரணமாகச் செலாயாங் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுச் செல்லப்பட்டார்.

நோராஸாமின் உடல் நிலை சீராக உள்ளதோடு அவர் சுயநினைவோடும்

உள்ளதாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின்

நடவடிக்கை மையம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அவர் உடல் நலம் பெற நாம் அனைவரும் பிரார்த்திப்போம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிலச்சரிவு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மிகவும் பரபரப்பாகச் செயல்பட்ட முக்கிய அதிகாரிகளில் நோராஸாமும் ஒருவராவார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.