ALAM SEKITAR & CUACA

மக்களவை சபாநாயகராக ஜோஹாரி அப்துல் தேர்வு

19 டிசம்பர் 2022, 5:27 AM
மக்களவை சபாநாயகராக ஜோஹாரி அப்துல் தேர்வு

ஷா ஆலம், டிச 19- நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து அதிக வாக்குகளைப் பெற்றதைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகராக முன்னாள் சுங்கை பட்டாணி நாடாளுமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹாரி அப்துல் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

ஜோஹாரிக்கு 147 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட டான்ஸ்ரீ முகமது ராட்ஸி ஷேக் அகமதுவுக்கு 74 வாக்குகளும் கிடைத்ததாக மக்களவை செயலாளர் டாக்டர் நிஸாம் மைடின் பாச்சார் மைடின் அறிவித்தார்.

சபாநாயகர் பதவிக்கு இரு வேட்பாளர்கள் பெயர் குறிப்பிட்டப் பட்டதால் பெயரை தாளில் எழுதுவதன் மூலம் தங்களின் தேர்வுக்குரிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

சபாநாயகர் பதவிக்கு அரசாங்கத்தின் சார்பாக ஜோஹாரியின் பெயரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்மொழிந்த வேளையில் எதிர்க்கட்சியின் சார்பாக முகமது ராட்ஸியின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் முன்மொழிந்தார்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.