NATIONAL

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் சமீபத்திய தகவல்களைப் பெற உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்

17 டிசம்பர் 2022, 3:20 AM
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் சமீபத்திய தகவல்களைப் பெற உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்

கோலாலம்பூர், டிச 17 : பத்தாங் காலி முகாமின் நிலச்சரிவு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்கள் அல்லது உறவினர்கள் சமீபத்திய தகவல்களைப் பெற உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறை தலைமையக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NADMA) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அல்லது குடும்பத்தினர் டிஎஸ்பி ரிட்சுவான் 013-8767 700 அல்லது இன்ஸ்பெக்டர் அஸிஸி 019-5580 496 ஆகிய இருவரை கொடுக்கப்பட்டுள்ள எண்களின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

நேற்று அதிகாலை நடந்த இந்த துயரச் சம்பவத்தில் மாலை மணி 4.40 நிலவரப்படி 19 பேர் பலியாகியுள்ளனர், 14 பேர் இன்னும் காணவில்லை, 61 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

 

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.